1985 ம் வருடம் திருச்சியில் வேலையில் இருந்த சமயம், தஞ்சைக்கு வீட்டிற்கு கோடையில் வரும் பொழுது வெயிலின் தாக்கம் ஒன்று போல் இருந்தது. ஏன் தஞ்சை கந்தக பூமி போல் ஆனது என்ற கேள்வி, ”பசுமை நண்பர்கள்” என்ற அமைப்பை திரு.P.G.பிரபாகரன் அவர்கள், பத்து நண்பர்களுடன் சேர்ந்து சூரக்கோட்டை ஊராட்சி, கீழவஸ்தாச் சாவடி கிராமத்தில் துவக்கி மரம் நடும் பணியை ஆரம்பிக்க காரணமானது. இந்த பணிக்கு தூண்டுகோல் அவருடைய தந்தை திரு.ப. கணபதி யின் இயற்கை செயல்பாடுகள். இப் பணியில் திருவாளர்கள் விறகு கடை கலியமூர்த்தி, மு.கோவிந்தராஜ்,வை.விவேகானந்தம், க.கலியமூர்த்தி, கோ.ஜெயபிரகாஷ் மற்றும் பலர் துணையிருந்தனர்.
இந்த அமைப்பு 14-05-2014 , திரு.ப.கணபதி செட்டியார் அவர்களின் நூற்றாண்டு தினத்தன்று “ தாய் மண்- A Mother Earth Initiative” என்ற பெயரைப்பெற்று மரம் நடுதல், கிராம பள்ளி குழந்தை களுக்கு இயற்கை யின் கொடை, தன் சுகாதாரம், சுற்றுப்புற சூழல் பற்றி அறிவுறுத்தல் ஆகிய பணிகளை தொடர்ந்தது. 2014 ம் ஆண்டு தாய் மண் அமைப்பு ,Green Hands-L&T, Chennai, Green Hands Esha-Coimbatore, Thanjavur Forest Department உடன் இணைந்து மிகப்பெரும் மரம் நடு விழா வை பள்ளி மற்றும் குளக்கரையில் நடத்தியது.
இயற்கை யை பாதுகாத்தல், வளர்த்தல், பள்ளிக்குழந்தைகளுக்கு சுற்றுப்புற சூழல் மாசுபாட்டின் கேடுகளை எடுத்துரைத்தல், சுகாதாரம் பற்றி போதித்தல், நீர் நிலைகலை பாதுகாத்தல் ஆகியவற்றில் தீவிர மாக பயணிக்க இந்த அமைப்பை விரிவாக்கவும், அரசு அங்கீகாரம் பெறவும் நண்பர்கள் ஆதரவுடன் முயற்சி முன்னெடுக்கப்பட்டது.
ஆதலால், 22-04-2020 பூமி தினத்தன்று( Earth Day) நமது தாய் மண், MOTHER EART INDIA FOUNDATION என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, கொள்கை, நோக்கங்கள் உருவாக்கப்பட்டது. 2022 ம் வருடம் மார்ச் மாதம் 11 ம் தேதி , தமிழ் நாடு கூட்டுறவு சொசைட்டி சட்டத்தின் படி ”மதர் எர்த் இந்தியா பவுண்டேஷன்” பதிவு செய்யப்பட்டது. இப்பொழுது , தமிழக அரசுவின் பசுமை திட்டத்துடனும், க்ரீன் நீடா அமைப்புகளுடனும் இணைந்து பனை மரம் நடுதல், ஏரி தூர் வாறுதல் போன்ற பணிகளும், நமது MEIF சுயமாக பள்ளிகளுக்கு நூலகம் அமைத்தல், பள்ளிக்குழந்தைகளுக்கு சீருடை வழங்கல்,மரக்கன்று அளித்தல், மரம் நடுதல், நீர் நிலைகளை பாதுகாத்தல் ஆகிய பணிகளையும் நண்பர்கள், கிராம மக்கள் மற்றும் நமது உறுப்பினர்களின் ஆதரவுடன் செய்து வருகிறோம்.